இதிலிருந்து நாம் எழுந்து நிற்கும் போது ஏற்படக்கூடிய ரத்த அழுத்த மாறுபாட்டால் உயர்வால், நாம் மயங்கி விழ வேண்டும்.ஆனால் அவ்வாறு நிகழ்வதில்லை.
இதற்கு காரணம் இதயத்தில் இருந்து மூளைக்கு செல்லக் கூடிய இரத்த நாளங்களோடு இணைந்து உள்ள Barereceptors என்கிற நரம்புகள். இவை மத்திய நரம்பு மண்டலத்தையும், மூளை இரத்த ஓட்டத்தையும் இணைக்கின்றன. மூளை இரத்த ஓட்டத்தில் ஏற்படக் கூடிய மாறுதல்கள் மீது உடனடியாக செயல்படுகின்றன. இதை BaroReflex என்று சொல்கிறார்கள்.
குறைவான இரத்த அழுத்தத்தின் போது மயக்கம் தோன்றும் சமயம், அல்லது அதிக இரத்த அழுத்தத்தின் காரணமாக மாரடைப்பு,பக்கவாதம்,இதய செயலிழப்பு முதலியவை உடனடியாக ஏற்பட்டு விடாமல், தாங்கும் சக்தியாக இந்த நரம்புகள் செயல்படுகின்றன.
சரி, இது உடற்கூறு. இதில் நாம் அறிந்து கொள்ள என்ன இருக்கிறது?
இந்த நரம்புகள் செயல்பட தூண்டுகின்றன புரதங்கள் PIEZO1, PIEZO2 ஆகியவை கண்டறியப் பட்டுள்ளது. இந்த புரதங்களின் கட்டமைப்பு அறியப்பட்டு, இவை உருவாகத் தூண்டக் கூடிய மூலக்கூறு கண்டறியப் பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்புகள் மனிதனுக்கு எவ்வாறு உதவும்?
தற்போது உயர் இரத்த அழுத்த பிரச்சினைகளுக்கு உள்ள மருந்துகளில் முன்னேற்றம் ஏற்படும். தலைசுற்றல் பிரச்சினை உள்ளவர்களுக்கு தீர்வு கிடைக்கும்.
இதில் இரத்த அழுத்தம் தொடர்புடைய உடலியக்க மற்றும் தொற்றா நோய்கள் கிருமிகள் உண்டாக்குவது இல்லை. கிருமித் தொற்றுகளை உடலின் நோயெதிர்ப்பு பார்த்துக் கொள்கிறது. ஆனால் அதே நோயெதிர்ப்பு சக்தி உடலின் இயக்க சீர்கேடுகளை தாக்குவதாலேயே Auto Immune Disease கள் ஏற்படுகின்றன. இது போல உடலியக்க தூண்டுதல்கள் தொடர்புடைய மூலக்கூறுகள் கண்டறியப் படுவது, தொற்றா நோய்களையும் தீர்க்கும் வழிகளை தரும்.
- த.செ. முசம்மில் மீரான் BE.,BL.,
வழக்குரைஞர்,
திருவைகுண்டம்.