Feb 20, 2021

ஆன்லைனில் ஆர்டிஐ தகவல் கட்டணம் செலுத்துவது எப்படி

Details Updated 11-02-2023
 
 
இப்போது கருவூலம் இணையதளம் மூலம் தகவல் உரிமை சட்ட மனுக்களின் தகவலுக்கான நகல் கட்டணத்தை இணைய வழியில் செலுத்தலாம். PayTM , GooglePay போன்ற UPI applications பயன்படுத்தியும் செலுத்தலாம்.


முதலில் இந்த தளத்தில்நுழையுங்கள்.

👉  karuvoolam echallan 👈

எந்த பயனர் பெயரும் கடவுச்சொல்லும் தேவையே இல்லை.

இந்த படிவத்தில் சிவப்பு * கட்டாயமாக தரப்பட வேண்டிய தகவல். அதில் முதலில் தங்கள் பெயர், அலைபேசி எண், முகவரி, ஊர், அஞ்சல் பின்கோடு, மின்னஞ்சல் முதலியவற்றை நிரப்பிக் கொள்ளுங்கள். இது எதையும் தமிழில் கொடுக்க வேண்டாம். Challan அச்சிடும் போது தமிழ் வரவில்லை.


 Period details என்பதில் from date மற்றும் to date இரண்டும் ஒன்று தான். பணம் செலுத்தும் நாளையே குறிப்பிடுங்கள். முன்னர் OTP validation இருந்தது இப்போது அது இல்லை.

 

Department Details பகுதியில்

District : PAO chennai secretariat

Service Receiving Department : 03501 Human Resources

DDO Name : 44010051 - Section Officer


Service Details பகுதியில்

Service Rendering Department : 03501 Human Resources

தேர்வு செய்து விட்டு Generate Services அழுத்தவும்.

Receipt Type : Right To Information Fees

Sub Type : Right To Information Fees

இதை தேர்வு செய்த உடன் ACCT Code கட்டத்தில் 0070 60 118 AA 22739  என்பது வந்து விடும்.

 அடுத்து இருக்கும் துறையின் குறிப்பு எண் என்பதில் உங்களுக்கு பணம் செலுத்த வந்த கடிதம் எண் குறிப்பிடலாம். குறிப்புகள் பகுதியில் எந்த அலுவலகம் எதற்காக பணம் செலுத்துகிறீர்கள் என தெளிவாகும் படி சுருக்கமாக கொடுங்கள்.

இப்போது  செலுத்த வேண்டிய தொகையை குறிப்பிட்டு, Payment GateWay என்பதில் State Bank of India என்பதையும் Payment Method Online  என்பதையும் தேர்ந்தெடுங்கள். Submit கொடுத்ததும், SBIMOPS என்கிற வங்கியின் இணைய தளத்திற்கு செல்லும். அதில் கட்டண விவரங்கள் உடன் கீழே QR code என்று இருப்பதை தேர்ந்தெடுங்கள்.

அலைபேசியின் Gpay Paytm Phonepe ஏதேனும் ஒரு செயலி மூலம் QR Code Scan செய்து கட்டணம் செலுத்தி, Success என்கிற செய்தி வரும் வரை காத்திருங்கள். பின்னர் வங்கி இணையதளத்தில் இருந்து கருவூலம் தளத்திற்கு தானாக மாறும் வரை காத்திருங்கள். திரையில் Download Challan என்று வரும். அதை அச்சிட்டு கட்டண ரசீதாக அனுப்பிக் கொள்ளலாம்.

அவ்வளவு தான். மிக எளிது!

இனி 4 ரூபாய் தகவல் கட்டணத்திற்கு பெட்ரோல் போட்டு போய், வரிசையில் காத்திருந்து செலுத்த அவசியமில்லை.

நன்றி. 

இந்த தகவல் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்குமென கருதினால், இந்த பதிவின் இணைப்பை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். 👍

இந்த பதிவின் சுருக்க சுட்டி

bit.ly/rti-fees-pay-online

- த. செ. முசம்மில் மீரான்,

வழக்குரைஞர்

திருவைகுண்டம்