Mar 24, 2019

நல்வரவு!


அன்புடையீர்!

எனது வலைப்பக்கத்திற்கு தங்களை  மகிழ்வுடன் வரவேற்கிறேன்!
இந்த பக்கம் நான் கற்றறிந்த விசயங்களை தங்களோடு பகிர்ந்து கொள்வதற்காக ஏற்படுத்தி உள்ளேன்.

வழக்கறிஞர் தொழிலில் கற்பதற்கு முடிவே இல்லை என்பதால் , இத்தொழிலை "Legal Practice " என்றே குறிப்பிடுகிறார்கள்.
சட்டம் பற்றிய அறியாமை மன்னிக்கப்பட முடியாதது. எழுதப்படிக்க தெரியாத குடிமகனும் நாட்டின் அனைத்து சட்டத்தையும் அறிந்தவனாக இருப்பான் என்பதே சட்டத்தின் அனுமானம்.
ஆனால் நிதர்சனம் அவ்வாறில்லை.

சட்டங்களும் அதன் உட்பிரிவுகளும், வழக்கறிஞர் வாசித்து வாதாடுவதற்காக மட்டுமே அல்ல. நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் சட்டம் பற்றிய விழிப்புணர்வு அவசியம். நமது உரிமைகள் எதுவும் வீடு தேடி வந்து விடுவதில்லை. ஒவ்வொரு உரிமைகளையும் காப்பாற்றிக் கொள்ள போராடித் தான் ஆக வேண்டியுள்ளது. சட்டப்படியாக உரிமைகளைப் போராடிப் பெற்றுக் கொள்ளவே அனுமதிக்கப்பட்டுள்ளது, அவரவர் பலத்தைப் பிரயோகித்து பெற்றுக் கொள்வதற்கல்ல.

ஒரு வழக்கறிஞராக மட்டுமில்லாமல், ஒரு குடிமகனாகவும் எனது இந்த வலைப்பக்கத்தினை, கற்றறிந்த தோழமை வழக்கறிஞர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் பயன்படும் வகையில் எளிமையாகவும் சுருக்கமாகவும் எழுதிட முயற்சிக்கிறேன்.

தொடர்ந்து வாசித்து ஆதரவளிக்கவும்!
தொடர்ந்து எழுதிட ஊக்கமளிக்கவும்!


நன்றி! 👍