ஒருவர் மீது ஒரு குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விட்டதாலேயே அவரை சட்டம் குற்றவாளியாக கருதி விடுகிறதா?
இல்லை! பெரும்பாலும் இல்லை!
அனைத்து நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் ( Universal Declaration of Human Rights ) அதன் ஷரத்து 11 ல் இவ்வாறு கூறப்படுகிறது,
அவ்வாறு அவரை குற்றவாளி என சட்டத்தின் படியாக, தகுந்த சாட்சிகளோடு நிரூபிக்க வேண்டியது, அரசுத் தரப்பின் பொறுப்பாகும். அந்த பொறுப்பு குற்றம் சாட்டப்பட்டவரின் மீது எப்போதும் இல்லை. பின்வரும் சட்டப்பதம் இதற்குப் பொருத்தமானது.
குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை குற்றமற்றவர் என்று நிறுவ தகுந்த சாட்சியங்களை முன்னிலைப்படுத்தா விட்டாலும் அது அவர் மீதான குற்றமுறையீட்டை சரி என்றாக்கி விடாது. இது தொடர்பாக மாண்பமை உச்சநீதிமன்றம் பின்வரும் தீர்ப்பில் விவரித்துள்ளது.
இல்லை! பெரும்பாலும் இல்லை!
அனைத்து நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் ( Universal Declaration of Human Rights ) அதன் ஷரத்து 11 ல் இவ்வாறு கூறப்படுகிறது,
"Everyone charged with a penal offense has the right to be presumed innocent, until proved guilty according to the law in a public trial "குற்றம் சாட்டப்பட்ட நபர் சட்டத்தின்படியான விசாரணை நடைபெற்று குற்றவாளி என தீர்மானிக்கப்படும் வரையில் அவரை நிரபராதியாகவே அனுமானிக்க வேண்டும். இது குற்றவியலின் அடிப்படையான விதியாகும்.
அவ்வாறு அவரை குற்றவாளி என சட்டத்தின் படியாக, தகுந்த சாட்சிகளோடு நிரூபிக்க வேண்டியது, அரசுத் தரப்பின் பொறுப்பாகும். அந்த பொறுப்பு குற்றம் சாட்டப்பட்டவரின் மீது எப்போதும் இல்லை. பின்வரும் சட்டப்பதம் இதற்குப் பொருத்தமானது.
"ei incumbit probatio qui dicit non qui negat " - 'The burden of proof is on the one who declares, not on the one who denies' .
குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை குற்றமற்றவர் என்று நிறுவ தகுந்த சாட்சியங்களை முன்னிலைப்படுத்தா விட்டாலும் அது அவர் மீதான குற்றமுறையீட்டை சரி என்றாக்கி விடாது. இது தொடர்பாக மாண்பமை உச்சநீதிமன்றம் பின்வரும் தீர்ப்பில் விவரித்துள்ளது.
Kali Ram - vs- State of Himachal Pradesh ( 1973 AIR 2773 )ஆனால் இந்த அனுமானம் மாற்று முறையாவணங்கள், லஞ்சம், குடும்ப வன்முறை, தேசவிரோத குற்றம் தொடர்பான முறையீடுகளில் அதிகம் கருத்தில் கொள்ளப்படுவதில்லை.